1. Home
  2. தமிழ்நாடு

வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் விரதம் இருக்க போகிறேன் - பவன் கல்யாண்..!

1

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட தரமற்ற பொருட்களை முந்தைய அரசு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலந்திருந்ததை திருப்தி தேவஸ்தானம் உறுதி செய்தது. இந்நிலையில், வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் விரதம் இருக்க போவதாக, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்தார்.

அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்தது குறித்து நான் மிகவும் வேதனையடைந்தேன். அனைவருக்கும் இந்த துயரமான தருணத்தில் வலிமை தருமாறு வெங்கடேசப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.

​​இந்த தருணத்தில், நான் கடவுளிடம் மன்னிப்புக் கோரி, பரிகார சபதம் எடுத்து, பதினோரு நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுக்கிறேன். 11 நாள் பரிகார தீட்சை முடிவில் அக்டோபர் 1, 2 தேதிகளில் திருப்பதி சென்று இறைவனை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி, பிறகு இறைவனிடம் பரிகாரத் தீட்சை நிறைவு செய்வேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like