பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் – பவன் கல்யாண், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

சென்னை திருவான்மியூரில் தமிழக பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, ஒரே நேரத்தில தேர்தல் நடத்துவதால், ஏற்படும் நன்மைகள் மற்றும் பலன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது,
பவன் கல்யாணம் இங்கே வந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் பாரத பிரதமரின் கனவு என்று அவர் குறிப்பிட்டார்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு தேர்தல் நடந்தால் 10,000 கோடி செலவும் மாநில தேர்தலுக்கு 1000 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கிறது என அவர் கூறினார்.
அந்த பணம் மக்களின் நன்மைக்குச் செலவு செய்தால், ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த நாட்டு மக்களைப் பாதுகாக்கும் என்றும் ஒரு குடும்பத்தில் அடிக்கடி குழந்தை பெற்றால் ஒரு வீட்டின் நிதிநிலை எப்படி இருக்குமோ அது போலத் தான் ஒவ்வொரு முறை தேர்தல் வந்தால் நிதிநிலை பாதிக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் நம் நாடு பலம் பெறும் என அவர் குறிப்பிட்டார்.