1. Home
  2. தமிழ்நாடு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து..!

1

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஐயா அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்


பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் உரிமைகளுக்காக, 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான, ஐயா திரு மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழக மக்கள் மேம்பாட்டிற்காகவும் அயராது உழைத்து வரும் ஐயா திரு. மருத்துவர் இராமதாஸ் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.


தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு.ச.இராமதாசு அவர்களின் பிறந்த நாளில் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சமூகநீதிப் பாதையில் நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணியைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Trending News

Latest News

You May Like