பதஞ்சலி மிளகாய் பொடியை திரும்ப பெற உத்தரவு..!

பதஞ்சலி நிறுவனத்திற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி பதஞ்சலி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மிளகாய் பொடியை சந்தையில் இகுந்து திரும்பப் பெறுமாறு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்பு ஒன்றில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் 2011-க்கு இணங்காததால் பேட்ச் நம்பர் AJD2400012-ஐ கொண்ட பேக்கேஜ் செய்யப்பட்ட சிவப்பு மிளகாய் பொடியின் முழு தொகுப்பையும் திரும்பப் பெறுமாறு பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
FSSAI நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பு எப்படி உள்ளது? மற்றும் தரம் எப்படி இருக்கிறது? என்பதை கண்காணிக்கும் அரசு நிறுவனமாகும். உணவுப் பொருட்களில் பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் வரம்பு உள்ளது. அதைத் தாண்டி பயன்படுத்தினாலோ? அல்லது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்தினாலோ? அதை சரி செய்யும் நோக்கில் நிறுவனம் செயல்படும்.
அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் சில மசாலா பொருட்களில் எத்திலின் ஆக்சைடு என்ற பூச்சிக்கொல்லி கலப்படம் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதை அடுத்து சில மசாலா பொருட்களின் உற்பத்தி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.