1. Home
  2. தமிழ்நாடு

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் படுகொலை.. குளித்தலை அருகே பரபரப்பு..!

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் படுகொலை.. குளித்தலை அருகே பரபரப்பு..!


கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கருப்பத்துரைச் சேர்ந்தவர் கோபால் (53). பிரபல ரவுடியான இவருக்கு, பொன்னுமணி என்ற மனைவியும், தமிழ்பொன்னி, கயல்பொன்னி என இரு மகள்களும், நரேன் கார்த்திக், நரேன் ராஜ் என்ற இரட்டை மகன்களும் உள்ளனர். அகில இந்திய தேவேந்திர குல தலைவர் பசுபதி பாண்டியன் ஆதரவாளரான இவர் மீது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொலை வழக்குகள் உள்ளன.

பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை - குளித்தலையில்  பரபரப்பு | Karur Famous Rowdy who was hacked to death by mysterious  persons: Stir in the Kulithalai ...
இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டருகே உள்ள அவருக்குச் சொந்தமான வயல்வெளியில் மர்ம நபர்களால் கோபால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபாலின் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குளித்தலை அருகே ரவுடி வெட்டி கொலை | Rowdy murdered near Kulithalai
சம்பவ இடத்திற்கு வந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like