கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம் - முதல்வர் ஸ்டாலின்..!
தேசிய அளவில் தனி நபர் வருமான குறியீட்டின் மூலம் மாநிலங்கள் இடையே இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மக்கள் நலனை மையப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தியதால் இது சாத்தியம் ஆனது என்றும் அதில் அவர் குறிப்பிடடு இருந்தார்.
இந் நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பகிர்ந்த புள்ளி விவரங்களை முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது;
தேசிய சராசரியை விஞ்சினோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்.
அடுத்து வரவுள்ள திராவிட மாடல் ஆட்சி 2ல் முதல் மாநிலமாக உயருவோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
தேசிய சராசரியை விஞ்சினோம்!
— M.K.Stalin (@mkstalin) July 23, 2025
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!
அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்! https://t.co/A5l9xs22X5