பாஸ்போர்ட் இணையதளம் நாளை வரை செயல்படாது..!
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் (www.passportindia.gov.in) தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த இணையதளம் 4-ந் தேதி (நேற்று முன்தினம்) இரவு 8 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை இயங்காது.
இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தை பயன்படுத்த முடியாது என்பதோடு, தங்களது நேர ஒதுக்கீடு, சந்தேகங்களுக்கு, பராமரிப்பு பணி முடிந்த பிறகு அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.