இன்று பாஸ்போர்ட் அலுவலகம் சென்னை ஐகோர்ட்டிற்கு விடுமுறை..!
கனமழை காரணமாக சென்னை ஐகோர்ட்டிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஐகோர்ட்டிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையால் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்கள்இன்று (அக். 16) இயங்காது என அறிக்கப்பட்டுள்ளது. அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களில் நாளை முன்பதிவு செய்தவர்கள் வேறு நாட்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.