1. Home
  2. தமிழ்நாடு

பயணிகள் அதிர்ச்சி : விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு..!

1

தமிழ்நாட்டில் மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, சனி, ஞாயிறு என்று தொடர்ச்சியாக விடுமுறைகள் வருகின்றன. 28-ஆம் தேதி வியாழன் மிலாடி நபி விடுமுறை, செப்டம்பர் 30, அக்டோபர் 1, சனி ஞாயிறு விடுமுறை, அக்டோபர் இரண்டாம் தேதி திங்கள் அன்று காந்தி ஜெயந்தி விடுமுறை. இவ்வாறு 4 நாட்கள் தொடர் விடுமுறையோடு, 29ஆம் தேதி வெள்ளி மற்றும் வேலை நாளாக இருப்பதால், பலர் அன்றும் விடுப்பு எடுத்து விட்டு, தங்களுடைய பிள்ளைகளுக்கும் காலாண்டு விடுமுறை தொடங்கி விட்டதால், ஜாலியாக 5 நாள் சுற்றுலா பயணத்தை திட்டமிட்டு, அதிலும் விமான பயணங்களாக ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில், தமிழ்நாட்டிற்குள் செல்லும் விமானங்களில் தான் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் தற்போது இந்த ஐந்து நாள் தொடர் விடுமுறையில், சுற்றுலா தளங்களான, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்களில், பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது. அதோடு இந்த சுற்றுலா தளங்களான வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில், பயணிகளின் டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

சென்னையில் இருந்து சுற்றுலா தளமான தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்ல, வழக்கமான விமான கட்டணம் (ரூ. 9,720). ஆனால் தற்போது 28 ஆம் தேதி கட்டணம், ரூ.32,581, 29 ஆம் தேதி கட்டணம் ரூ.28,816. துபாய்க்கு வழக்கமான கட்டணம் (ரூ.10,558), 28 ஆம் தேதி கட்டணம் ரூ.21,509, 29 ஆம் தேதி கட்டணம் ரூ.20,808. சிங்கப்பூர் வழக்கமான கட்டணம் (ரூ.9,371), 28 ஆம் தேதி கட்டணம் ரூ.20,103, 29 ஆம் தேதி கட்டணம் ரூ.18,404. மலேசியாவின் கோலாலம்பூர் வழக்கமான கட்டணம் (ரூ.7,620), 28 ஆம் தேதி கட்டணம் ரூ.15,676, 29 ஆம் தேதி கட்டணம் ரூ.14,230. இலங்கையின் கொழும்பு வழக்கமான கட்டணம் (ரூ.6,698), 28 ஆம் தேதி கட்டணம் ரூ.11,234, 29 ஆம் தேதி கட்டணம் ரூ.10,630.

இதைப்போல் இந்தியாவுக்குள் சுற்றுலா தளங்களான சென்னை- மைசூர் இடையே வழக்கமான விமான கட்டணம் (ரூ.2,558). 28 ஆம் தேதி கட்டணம் ரூ.7,437, 29 ஆம் தேதி கட்டணம், ரூ.5,442. சென்னை-கோவா வழக்கமான கட்டணம் (ரூ.4,049), 28 ஆம் தேதி கட்டணம் ரூ.8,148, 29 ஆம் தேதி கட்டணம் ரூ.9,771. இவ்வாறு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சொல்லும் விமான கட்டணங்கள், தொடர் விடுமுறையயையொட்டி, பல மடங்கு அதிகரித்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களில், கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. அதே நேரத்தில், சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமான கட்டணம் மட்டும் அதிகரித்துள்ளது. சென்னை தூத்துக்குடி வழக்கமான கட்டணம் (ரூ.3,853), 28 ஆம் தேதி கட்டணம் ரூ.11,173, 29ஆம் தேதி கட்டணம் ரூ.9,975.

Trending News

Latest News

You May Like