1. Home
  2. தமிழ்நாடு

பயணிகள் அதிர்ச்சி : விமான டிக்கெட் பல மடங்கு உயர்வு..!

1

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12ஆம் தேதி வருகிறது. அதனால் 10 முதல் 16ஆம் தேதி வரை உள்நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு விமானக் கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா உள்ளிட்ட பல நகரங்களுக்கு விமானக் கட்டணம் அதிகரித்துள்ளது.

விமானங்களில் இடங்களும் நிரம்பிவிட்டன. மும்பை – டெல்லி ஒருவழி விமானக் கட்டணம் சராசரியாக ரூ.6,876. ஆனால் தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.8.788 ஆக 27.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதேபோல் புனே, டெல்லி விமானக் கட்டணம் கடந்த தீபாவளியை விட தற்போது 44.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சென்னை-கொல்கத்தா ஒரு வழி கட்டணம் ரூ.6,815-ல் இருந்து ரூ.8,725 ஆக உயர்ந்துள்ளது. இது 28 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோல் கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, பாலி போன்ற நாடுகளுக்குச் செல்ல விமானத்தில் இடங்கள் இல்லை. இதனால் கட்டணம் இரு மடங்கு அதிகரித்துள்ளது.மேலும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை வெளிநாட்டு விமானங்களில் பெரும்பாலான இடங்கள் நிரம்பிவிட்டன. அந்தமானுக்குச் செல்பவரும் அதிகரித்து வருகின்றனர். இதனால் கட்டணமும் உயர்ந்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இப்போதே முன்பதிவு செய்ய ஆர்வமாக உள்ளனர். ஆனால் ஒரு சில நாடுகளுக்கு செல்ல விமானத்தில் இடம் இல்லை. இதேபோல் தாய்லாந்துக்கு பயணம் செய்வோர் அதிகமாக இருப்பதால் இரு மடங்காக கட்டணம் அதிகரித்துள்ளது.புத்தாண்டு வரை விமானங்களின் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like