ஏமாற்றத்தில் பயணிகள் : தொடங்கிய சில நிமிடத்திலேயே விற்று தீர்ந்த ஜனவரி 11-ம் தேதி ரயில் முன்பதிவு..!

பொங்கல் பண்டிக்கை 2024 ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் பயணச் சீட்டு 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (புதன்கிழமை) முதல் விரைவு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது.
டிக்கெட் முன்பதிவு விவரம்:-
1) செப்டம்பர் 13-ம் முன்பதிவு செய்வோர் ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
2) செப்டம்பர் 14-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
3) செப்டம்பர் 15-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
4) செப்டம்பர் 16-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14-ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
5) செப்டம்பர் 17-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
6) செப்டம்பர் 18-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
7) செப்டம்பர் 19-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் மக்கள் அதிகாலையே வந்து காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதன்படி, இன்று முன்பதிவு தொடங்கிய சில நிமிடத்திலேயே நெல்லை எக்ஸ்பிரஸ் , முத்து நகர் எக்ஸ்பிரஸ் , பொதிகை எக்ஸ்பிரஸ் , பாண்டியன் எக்ஸ்பிரஸ் உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களில் பயண சீட்டுகள் விற்று தீர்ந்தன.