முகம் சுளித்த பயணிகள்...! ரயில் இருக்கையை படுக்கையறையாக மாற்றிய காதல் ஜோடி..!
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், காதல் ஜோடி ஒருவர் ரயிலில் பயணம் செய்தபோது, தங்கள் இருக்கையை படுக்கையறையாக மாற்றியுள்ளனர். அவர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தாமல், அங்கு இருந்த பயணிகள் முன்பே அணைத்துக் கொண்டு முத்தமிட்டு, காதல் வெளிப்பாடு செய்துள்ளனர். இந்த காட்சிகளை பார்த்த மற்ற பயணிகள் சங்கடத்தில் ஆழ்ந்தனர்.
சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோ வெளிவந்ததும், நெட்டிசன்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். காதல் என்பது தவறு இல்லை. ஆனால் அதற்கும் எல்லைகள் இருக்க வேண்டும். பொதுமக்கள் இருக்கும் இடத்தில், குறிப்பாக ரயில்போன்ற இடத்தில் இப்படிச் செய்வது முறையல்ல என்று விமர்சித்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில், சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே ரயில்களில் அடக்கம், ஒழுக்கம் குறித்து பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை மதிக்காமல் நடந்துகொள்ளும் பயணிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் பலமுறை எச்சரித்துள்ளனர்.
OYO Train
— दिव्या कुमारी (@divyakumaari) September 6, 2025
ऐसे लोगों ने अब टट्रैन को भी oyo बना दिया 🤦♀️🤦♀️ pic.twitter.com/ZZCZ3nADdj
OYO Train
— दिव्या कुमारी (@divyakumaari) September 6, 2025
ऐसे लोगों ने अब टट्रैन को भी oyo बना दिया 🤦♀️🤦♀️ pic.twitter.com/ZZCZ3nADdj