1. Home
  2. தமிழ்நாடு

பயணிகள் அவதி..! ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு..!

Q

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து நாளை (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்காக இன்று (ஜூன் 1) பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். இதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதேபோல, தனியார் ஆம்னி பேருந்துகளும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ஆம்னி பேருந்துகளில் சாதாரண நாள்களில் ரூ.1,150 முதல் ரூ.1,400 வரை இருக்கும். ஆனால், தற்போது, ரூ.2,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வழக்கமாக வார இறுதி நாள்களில் கோவையிலிருந்து, சென்னை வருவதற்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்

ஆனால், இன்று (ஜூன் 1) கோவை மாவட்டத்திலிருந்து, சென்னை வருவதற்கு ஆம்னி பேருந்துகளில் ரூ.2.,200 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, நெல்லையில் இருந்து சென்னைக்கு வருவதற்கு சாதரண நாள்களில் ரூ.1,800 வரை இருக்கும். ஆனால், தற்போது, ரூ.2,899 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

நேரம் ஆக ஆக ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை மேலும் மேலும் உயர்த்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து சென்னை திரும்பும் அனைத்து ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

இதனால், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். ஒரு நபருக்கு சுமார் ரூ.1,000 வரை டிக்கெட்டின் விலை இருக்கும் நிலையில், தற்போது அதையும் தாண்டி கூடுதலாக ரூ.1,000 கொடுத்து ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

Trending News

Latest News

You May Like