1. Home
  2. தமிழ்நாடு

பயணிகள் அவதி..! 15 மணி நேரம் சுற்றி புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஆஸி., விமானம்..!

Q

குவாண்டாஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இஸ்ரேல் -ஈரான் விவகாரத்தில் ஏவுகணைத் தாக்குதல் குறித்து விமான நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டபோது, போயிங் கோ.787 விமானம்,இந்திய வான்வெளியின் தென்மேற்கு எல்லை வரை சென்று கொண்டிருந்தது, மேலும் 15 நேரமாக வானில் சுற்றிக்கொண்டே இருந்த நிலையில், விமானம் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்று காலை 11 மணியளவில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமான பெர்த்தில் தரையிறங்கியது.

அதேபோல, பெர்த்திலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்குச் சென்ற மற்றொரு விமானமும் பாதிக்கப்பட்டு, சிங்கப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. இந்த இரண்டு விமானங்களிலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like