1. Home
  2. தமிழ்நாடு

பயணிகள் அதிர்ச்சி..! திருப்பதி செல்லும் 2 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 14 ஆம் தேதி வரை ரத்து..!

1

திருப்பதி செல்லும் தமிழக பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அதாவது திருப்பதி ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மன்னார்குடி-திருப்பதி- மன்னார்குடி பாமணி எக்ஸ்பிரஸ் ரயில்(எண்.17407/408) இரு மார்க்கங்களிலும் மார்ச் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் திருப்பதி செல்லும் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியை சேர்ந்த பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஏற்கனவே பொறியியல் பணிகள் காரணமாக விழுப்புரத்தில் இருந்து திருப்பதி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் வரும் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் எதிர் மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயிலும் வரும் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் இரண்டு முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News

Latest News

You May Like