1. Home
  2. தமிழ்நாடு

பயணிகள் அதிர்ச்சி..! திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பயனர் மேம்பாட்டுக் கட்டணம் 50% உயர்வு..!

1

நாடு முழுவதும் 18 சர்வதேச விமான நிலையங்கள், 78 உள்நாட்டு விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவையனைத்தையும் 'ஏர்போா்ட் அத்தாரட்டி ஆஃப் இந்தியா' (AAI) எனும் பொதுத்துறை நிறுவனம்தான் பராமரித்து வருகிறது. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த பராமரிப்பு விவகாரத்தை தனியாரிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது. இதன் மூலம் போட்டி அதிகரித்து சிறபான சேவையை வழங்க முடியும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

டெண்டர் மூலம் தனியாருக்கு விடுவதாக அறிவித்தது. அதன்படி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது.

இந்நிலையில் அதானி குழுமம் கட்டுப்பாட்டில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பயனர் மேம்பாட்டுக் கட்டணம்(UDF) 50% உயர்த்தப்படும் என்ன தகவல் வெளியாகியுள்ளது 

வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் மார்ச் 31, 2025 வரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் உள்நாட்டுப் பயணிகளுக்கு  UDF கட்டணம் ரூ.506-ல் இருந்து ரூ.770-ஆக உயர்த்தி விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.பயணிகளின் டிக்கெட் கட்டணங்களோடு சேர்த்து UDF கட்டணமும் வசூலிக்கப்படும் என்பதால், இந்த புதிய அறிவிப்பால் விமான கட்டணங்கள் மேலும் உயரும் என கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like