1. Home
  2. தமிழ்நாடு

பயணிகள் ஷாக் ..! விரைவில் ரயில் டிக்கெட்டுகளின் விலை உயர வாய்ப்பு..!

1

இந்திய ரயில்வே வாரியமானது சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் போர்ட்டர்களின் ஊதியத்தை உயர்த்தி உள்ளது. இதன் படி, இந்தியாவின் 68 பிரிவுகளிலும் புதிய கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, 40 கிலோவுக்கு மேல் எடையுள்ள லக்கேஜ்களுக்கு பயணிகள் ரூ.340 செலுத்த வேண்டும். முன்னதாக, 250 ரூபாய் வழங்கப்பட்டது. அதே சமயம், நோய்வாய்ப்பட்ட நபரை ஸ்ட்ரெச்சரில் ஏற்றிச் செல்லும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதியம், 270 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு, 200 ரூபாய் வழங்கப்பட்டது.

சக்கர நாற்காலியில் முதியோர் அல்லது நோய்வாய்ப்பட்டவர்களை ஏற்றிச் செல்லும் போர்ட்டர்களின் ஊதியத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டணத்தின்படி ரூ.130க்கு பதிலாக ரூ.180 செலுத்த வேண்டும். போர்ட்டர்களின் ஊதியத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் பொருந்தாது. நாட்டின் A1 மற்றும் A வகை முக்கிய ரயில் நிலையங்களுக்கு மட்டுமே புதிய கட்டணங்கள் பொருந்தும். அதே சமயம், சிறிய ரயில் நிலையங்களில் உள்ள போர்ட்டர்களின் ஊதியம் வழக்கம்போலவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியத்தால் போர்ட்டர்களுக்கு மற்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன. பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ், போர்ட்டர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம். வருடாந்திர அனுமதிச்சீட்டுகள் மற்றும் சிறப்புரிமை டிக்கெட் ஆர்டர்களும் (PTO) போர்ட்டர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, போர்ட்டர்களுக்கு ஓய்வு அறை வசதியும் உள்ளது.

சுமை தூக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் ரயில்வே பள்ளிகளில் இலவசமாக படிக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர். இதுதவிர ரயில்வே வாரியம் மூலம் போர்ட்டர்களுக்கு ஆடைகளும் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற நிறைய வசதிகள் அவர்களுக்குக் கிடைக்கிறது.இவ்வாறு போர்ட்டர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதால் ரயில் பயணங்களுக்கான டிக்கெட்டுகளின் விலையும் விரைவில் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது 

Trending News

Latest News

You May Like