1. Home
  2. தமிழ்நாடு

பயணிகள் ஷாக்..! 10% தள்ளுபடி திட்டத்தை ரத்து செய்த மெட்ரோ ரெயில் நிர்வாகம்!

Q

மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாகச் செல்லப் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பயணிகள் மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை நேரடியாகவும், ஆன்லைன் முறையில் பெறலாம். மேலும், மெட்ரோ கார்டுகளை ரீசார்ஜ் செய்து பயணம் செய்யவும் முடியும்.
20 அல்லது அதற்கு மேற்பட்ட மெட்ரோ டிக்கெட்டுகளை காகித முறையில் வாங்கும்போது 10% தள்ளுபடி வழங்கப்பட்டது. ஆனால், இந்தச் சலுகை மார்ச் 1, 2025 முதல் நிறுத்தப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிஜிட்டல் முறையில் பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கான ஊக்கத்தை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. CMRL மொபைல் ஆப் மூலம் பயணிகள் மேலும் வசதிகளைப் பெறலாம்.


 


 

Trending News

Latest News

You May Like