பயணிகள் ஷாக்..! ஆமதாபாத்-லண்டன் விமான சேவை தற்காலிக நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு
ஆமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ள ஏர் இந்தியா நிர்வாகம், கேட்விக் விமான நிலையத்துக்கு பதில் ஹீத்ரூ விமான நிலையத்துக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இது தற்காலிகமானது, வாரம் 3 நாட்கள் மட்டுமே இந்த வழித்தடத்தில் விமான சேவை இருக்கும் என்றும் ஏர் இந்தியா கூறி உள்ளது. வழக்கமாக இந்த வழித்தடத்தில் 5 விமான சேவைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.