பயணிகள் மகிழ்ச்சி..! மகா சிவராத்திரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சிவராத்திரியை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதனை கருத்தில் கொண்டு சென்னை, பெங்களுரு ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இயக்க திட்டமிட்டு உள்ளது கூறப்பட்டு இருக்கிறது. இதனை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.
மகா சிவராத்திரி இந்த ஆண்டு வருகிற 26ந் தேதி இரவு 12 மணி முதல் மறுநாள் 27ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை மகா சிவராத்திரி ஆகும். மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு மற்றும் மண்டல கால பூஜைகள் நடைபெறும்.