1. Home
  2. தமிழ்நாடு

பாதியாக குறைந்தது பாசஞ்சர் ரயில் கட்டணம்..!

Q

கொரோனா நோய் தொற்று காலத்தில் பாசஞ்சர் ரயில்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவேக ரயில்களாக மாற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து குறைந்தபட்ச ரயில் கட்டணம் பத்து ரூபாய் முதல் 30 ரூபாயாக அதாவது எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்துக்கு இணையாக அதிகரித்தது. இதனால் பயணிகள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
இந்தக் கட்டணத்தை குறைக்கும்படி பொது மக்களிடமிருந்து கோரிக்கை வந்ததைத் தொடர்ந்து நேற்று ரயில்வே வாரிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரயில் கட்டணத்தை மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டு புதிய கட்டண விகிதம் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு வந்தது.
இதன்படி இரண்டாம் வகுப்பு பாசஞ்சர் கட்டணம் பாதியாக அதாவது 50 சதவீதம் குறைக்கப்பட்டது. மாநகர மின்சார ரயில்களுக்கும் இந்த கட்டண குறைப்பு பொருந்தும் என்பதால் சிறு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த கட்டண குறைப்பு நிதிச் சுமையிலிருந்து நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவுக்கு முன்பு நாடு முழுவதும்பாசஞ்சர் ரயில்களாக ஓடி பின்னர் எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் ரயில்கள் என மாற்றப்பட்ட அனைத்து ரயில்களுக்கும் இந்த கட்டண குறைப்பு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் 30 ரூபாயிலிருந்து தற்போது 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி வரை 35 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் சாதாரண ரயில்களில் விரைவு ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டு மடங்கு கட்டணம் குறைந்துள்ளது.
சென்னையில் இருந்து காட்பாடிக்கான கட்டணம் 60 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும் திருவாரூரில் இருந்து நீடாமங்கலத்திற்கு 30 ரூபாயிலிருந்து பத்து ரூபாயாகவும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு 80 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும் கட்டணம் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like