1. Home
  2. தமிழ்நாடு

ஏசி பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்ட பயணி வேதனை..!

1

குஜராத் ரயில் பயணி ஒருவர் எக்ஸ் தளத்தில், குஜராத்தை சேர்ந்த அன்சுல் சர்மா என்பவர் வதோதராவிலிருந்து சூரத் செல்லும் மேற்கு ரயில்வேயின் ஏசி பெட்டி ஒன்றில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.

உறுதி செய்யப்பட்ட அந்த டிக்கெட்டுடன் ரயில் நிலையம் சென்ற அன்சுல் சர்மாவுக்கு தலைசுற்றிப்போனது. அங்கே அவர் ஏறவேண்டிய ஏசி பெட்டியில், முன்பதிவற்ற ரயில் பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர். சுதாரித்துக் கொண்ட அன்சுல், தன்னிடம் இருக்கும் முன்பதிவு டிக்கெட்டை காட்டி ஏசி பெட்டியில் ஏற முயன்றார்.

அவ்வளவுதான் அடுத்த நிமிடம் அவர் பிளாட்பாரத்தில் தூக்கி வீசப்பட்டார். அன்சுல் மட்டுமன்றி ஏசி பெட்டியில் முன்பதிவு செய்த பயணிகள் பலரும் அப்படித்தான், பெட்டியில் ஏற வழியின்றி பிளாட்பாரத்திலேயே தடுமாறிக்கொண்டிருந்தனர். தவித்துப்போன அன்சுல் அருகிலிருக்கும் போலீஸாரிடம் உதவி கேட்டிருக்கிறார். அவர்களோ ’பண்டிகை நாட்களில் கூட்டம் அப்படித்தான் இருக்கும்’ என்று அலட்சியம் செய்தார்கள்.

இதனையடுத்து பொங்கியெழுந்த அன்சுல், ரயில் நிலையத்தின் கூட்ட நெருக்கடி, முன்பதிவற்ற பயணிகளின் அடாவடி, கண்டுகொள்ளாத போலீஸார் மற்றும் ரயில்வே நிர்வாகம் உள்ளிட்ட பலவற்றையும் செல்போனில் வீடியோவாக எடுத்தார். அவற்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, தனது டிக்கெட் கட்டணம் 1174 ரூபாயை உடனடியாக வழங்குமாறும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டும் குமுற ஆரம்பித்தார். மேற்கு ரயில்வே துறையால் பாதிக்கப்பட்ட பலரும், இந்த பதிவில் வந்து தங்கள் கசப்பு அனுபவங்களை பட்டியலிட்டு வருகின்றனர்.


 

Trending News

Latest News

You May Like