ஏர் இந்தியா விமான விபத்துக்கு முன் பயணி வெளியிட்ட வீடியோ! தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இல்லை..!
இந்த நிலையில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்த பயணி ஒருவர் விமானத்தில் தொழில்நுட்ப வசதிகள் எதிரியாக செய்யவில்லை என்ற குற்றம் சாட்டி தளத்தில் பதிவு ஒன்றே பதிவிட்டுள்ளார். அதில் இரண்டு மணி நேரம் முன்பு நான் அந்த விமானத்தில் பயணித்தேன் வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்து தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இல்லை என்றும் அவை இயங்கவும் இல்லை. இதனை ஏர் இந்தியாவை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் விமான விபத்தானது கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக பதிவாகியுள்ளது.ஏர் இந்தியா லண்டன் விமானத்தில் பயணித்த 242 பேரும் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.கடந்த 2010ல் மங்களூரு விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது, ஓடுபாதையை தாண்டிச் சென்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 158 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
I was in the same damn flight 2 hours before it took off from AMD. I came in this from DEL-AMD. Noticed unusual things in the place.Made a video to tweet to @airindia i would want to give more details. Please contact me. @flyingbeast320 @aajtak @ndtv @Boeing_In #planecrash #AI171 pic.twitter.com/TymtFSFqJo
— Akash Vatsa (@akku92) June 12, 2025
அகமதாபாத்தில் ஏர் இந்தியா AI‑171 விமானம் பிற்பகல் 1.38 மணி அளவில் 825 அடி உயரத்தில் சுமார் 60 கீலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த கட்டுப்பாட்டை இழந்து பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏர் இந்தியா AI‑171 விமானம் கீழே விழுந்து கட்டிடங்கள் மோதியதில் விமானத்தில் இருந்த எரிபொருள் தீப்பற்றி எரிந்தது. பின்னர் பலத்த சத்துடன் வெடித்துச் சிதறியது.
மேலும் ஏர் இந்தியா AI‑171 விமான விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் அணைத்தும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக, அகமதாபாத் நோக்கி புறப்பட்டிருந்த இண்டிகோ விமானம் வழி மாற்றப்பட்டு மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி அழைத்துவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.விமானம் மோதிய கல்லூரி விடுதி கட்டிடத்திற்குள் இருந்த மாணவர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் , இந்த நிகழ்வில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.