1. Home
  2. தமிழ்நாடு

VIDEO : நடுவானில் வெடித்து சிதறிய பயணிகள் விமானம்..!

Q

அமெரிக்காவில் கான்சாஸிலிருந்து புறப்பட்ட ஏர்லைன்ஸ் விமானம், வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க போடோமாக் நதியின் மேல் தாழ்வாக விமானம் பறந்து கொண்டு இருந்தது. அப்போது பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. பயணிகள் விமானத்தில் 64 பேரும், ராணுவ ஹெலிகாப்டரில் மூன்று பேரும் பயணித்திருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அமெரிக்க பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து ரீகன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 


 

null


 

Trending News

Latest News

You May Like