1. Home
  2. தமிழ்நாடு

விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கை மீது நடந்த பயணி..!

1

மெக்சிகோ விமான நிலையத்தில் கவுதமாலாவிற்கு செல்வதற்கான ஏரோமெக்சிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுமார் நான்கு மணி நேரம் காலதாமதமானதாக தெரிகிறது. இதனால் பயணம் செய்ய இருந்தோர் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். 

மேலும் காற்று குறைவான இடத்தில் அவர்கள் அமர்த்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. குடிப்பதற்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. இந்த நிலையில் விமானத்தில் இருந்த மற்ற பயணிகளின் ஆதரவோடு எமர்ஜென்சி கதவை திறந்து, விமான இறக்கையில் ஒரு பயணி ஒய்யாரமாக நடந்து சென்றுள்ளார். இறக்கையின் பாதி தூரம் வரை சென்ற அந்த நபர், மீண்டும் விமானத்திற்குள் சென்றுள்ளார். 

விமானத்தை சேதப்படுத்தவோ, அசம்பாவிதமான செயல்களிலோ ஈடுபடவில்லை. ஆனால், விமான போக்குவரத்து பாதுகாப்பு விதிகளின்படி அந்த நபரை விமான ஊழியர்கள் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர்.

விமானத்தில் இருந்த 77 பயணிகள் அந்த நபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றபோதிலும் விமான ஊழியர்கள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். அந்த நபருக்கு ஆதரவான இருந்து பயணிகள் காலதாமதம், காற்று குறைபாடு பயணிகள் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிப்பதாக இருந்தது. அவர் எங்கள் உயிரை காப்பாற்றினார் எனத் தெரிவித்தனர். 

Trending News

Latest News

You May Like