தவெக கட்சியின் கொள்கை தலைவர்கள் அறிவிப்பு..!
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தொடங்கி நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மற்றும் கொள்கைத் தலைவர்களை அறிவிக்கும் வகையில் 'வெற்றி வாகை' எனத் தொடங்கும் கொள்கைப் பாடல் மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது. கொள்கைப் பாடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையை விளக்கும் விஜயின் குரல் இடம்பெற்றுள்ளது.
அதில் விஜய், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே! 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொன்ன ஆதியோன் திருவள்ளுவருடைய வழியில், நம்முடைய தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பார்போற்றும் பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாய் ஏற்று சாதி, மத, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க 'மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள்' அதாவது 'Secular Social Justice Ideologies' ஓட நம்ம தமிழக வெற்றிக் கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கணும்னு நான் வரேன்" என்று கூறியுள்ளார்.