மூளைவளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்.. குஷ்பு கருத்துக்கு மாற்றுத்திறனாளிகள் கண்டனம் !

காங்கிரஸில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு நேற்று டெல்லி சென்று பாஜகவில் இணைந்துச்கொண்டார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வந்திருங்கிய அவருக்கு உற்சாக வவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இருக்கிற இடத்தில் விஸ்வாசம் காட்டி வந்தேன். எதிர்க்கட்சியில் இருந்ததால் ஆளுங்கட்சியை எதிர்த்தேன்.
வேளாண் சட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். ஆனால் இப்போது அதை பாஜக நிறைவேற்றும்போது ஏன் எதிர்க்க வேண்டும் என காங்கிரஸை பார்த்து கேட்டார். ஒரு திட்டத்தை எதிர்க்க வேண்டுமென்றால் அதற்கான தீர்வையும் கொடுக்க வேண்டும். ஆனால் அதை செய்வதில்லை எனத் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சி மூளைவளர்ச்சி இல்லாத கட்சி எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் மூளைவளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என நடிகை குஷ்பு கூறியதற்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மூளை வளர்ச்சி இல்லாதவர்களை சிறுமைப்படுத்துவது கண்டனத்திற்குரியது எனவும் அக்கூட்டமைப்பு கூறியுள்ளது.
newstm.in