1. Home
  2. தமிழ்நாடு

இனி மெரினா ,பெசன்ட் நகர் ,எலியட்ஸ் கடற்கரையில் வாகனம் நிறுத்த கட்டணம்..!

Q

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் வாகன நிறுத்தும் இடத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியானது.

வாகன நிறுத்த கட்டணத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும் கட்டணம் செலுத்தாமல் இருப்பதை தடுக்கும் விதமாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட் வாகன நிறுத்த முறையை அமல்படுத்துமாறு மாநகராட்சி வருவாய் துறை மற்றும், சிறப்பு திட்ட செயலாக்கு துறைக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

சென்னை மெரினா கடற்கரையில் வாகனம் நிறுத்த டோல்கேட் முறையில் கட்டணம் வசூல் செய்யவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், எலியட்ஸ், கடற்கரையில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்மார்ட் வாகன நிறுத்தும் முறையை அமல்படுத்த மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like