பெற்றோர்களே இது உங்களுக்காக..! பட்டாசுகள் வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை..? செய்யக்கூடாதவை..?
தீக்காயம் ஏற்பட்ட உடன் செய்ய வேண்டியவை:
1. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்னதாக நல்ல உடல் வலிமையுடன் இருப்பவர்கள் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ள வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோரை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றலாம்.
2. முடிந்தால் மின்சாரப் பெட்டியை அணைத்து விட்டு, கேஸ் சிலிண்டரை வெளியே கொண்டு வந்துவிடவேண்டும்.
3. தீயை முதலில் அணைக்க வேண்டும். தீயை அணைக்க எளிதாக முடியாவிட்டால் போர்வையை சுற்றி அணைக்க வேண்டும். கைகளிலோ அல்லது கால்களிலோ, தீக்காயம் ஏற்பட்டால் முதலில் அணிகலன்களை கழற்றி விட வேண்டும்.
4. தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் 15 நிமிடம் நீரில் கழுவ வேண்டும். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
தீக்காயம் ஏற்பட்டால் செய்யக்கூடாதவை:
1. தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் ஐஸ் கட்டி வைக்கக்கூடாது. ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகள் பயன்படுத்துவதால் தோல் திசு சேதம் ஏற்படலாம்.
2. தீக்காயம் மேல் வீட்டில் உபயோகிக்கக் கூடிய பொருட்களான மஞ்சள், காபி பவுடர், டீத்தூள், பேஸ்ட் போன்றவற்றை தீக்காயம் மேல் பயன்படுத்தக் கூடாது.
பட்டாசு வெடிக்கும்போது செய்யக்கூடாதவை:
வீடுகளுக்குள் பட்டாசு வெடிக்க கூடாது. கைகளில் பிடித்துக்கொண்டு பட்டாசை பற்ற வைக்க கூடாது. பற்ற வைக்கப்பட்ட பட்டாசை குனிந்து பார்க்கக்கூடாது. தவறாக பற்ற வைக்கப்பட்ட அல்லது பாதி எரிந்த பட்டாசை தொடக்கூடாது. சிறு குழந்தைகளை தனியாக பட்டாசுகளை கையாள அனுமதிக்க கூடாது. அடுத்தவர்களை குறிவைத்து பட்டாசை பற்ற வைக்க கூடாது. குறுகலான சந்துகளில் பட்டாசை வெடிக்கக் கூடாது.