1. Home
  2. தமிழ்நாடு

பெற்றோர்கள் கவனத்திற்கு : இனி மாணவர்களின் செயல்பாடுகள் பெற்றோருக்கு உடனுக்குடன்..!

1

தமிழ்நாட்டின் பல இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என எதிர்பார்ப்புகள் கிளம்பியது.

அதேநேரம், ஜூன் 4ஆம் தேதியே மக்களவைத் தேர்தல் 2024-க்கான முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதனால் மேலும் பள்ளி திறப்பு தள்ளிப் போகும் என அனைவரும் எதிர்பார்த்த காத்துக் கொண்டிருந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது, தற்போது கடும் வெயில் காரணமாக பள்ளிகளின் திறப்பு தேதி ஜூன் 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது  என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது..

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2024-2025 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதேநேரம், பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உட்பட கல்வி உபகரணங்கள் அனைத்தையும் மாணவர்களுக்கு வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மாணவர்களுக்கு எந்தெந்த கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது என்பதை பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு இருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு குறுஞ்செய்தி மூலம் பெற்றோருக்கு தெரிவிக்கும் முறை இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், மாணவர்களின் பள்ளி செயல்பாடுகளையும், பள்ளிக்கல்வித் துறையின் திட்டங்களையும் பெற்றோருக்கு தெரிவிக்க அவர்களின் வாட்ஸ்அப் எண்ணில் தகவல்கள் அனுப்பப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

Trending News

Latest News

You May Like