1. Home
  2. தமிழ்நாடு

பெற்றோர்கள் ஷாக்..! சத்துணவு சாப்பிட்ட பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்..!

1

திருவாரூர் அருகே உள்ளது தென்னவராயநல்லூர். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது.
 

நேற்று மதியம் பள்ளிக் குழந்தைகளுக்கு கொண்டைக்கடலையுடன் சத்துணவு வழங்கப்பட்டது. மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ மாணவியர் மூன்று பேருக்கு வாந்தி ஏற்பட்டது. பல மாணவ மாணவியருக்கு மயக்கமும் ஏற்பட்டது.பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 39 பேர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர்.
 

சிகிச்சை பெரும் மாணவ மாணவியரை கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 

மேலும் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவியர் அனைவரையும் மருத்துவமனையில் சேர்க்கவும் உரிய சிகிச்சை அளிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

Trending News

Latest News

You May Like