பெற்றோர்கள் அதிர்ச்சி..! 20க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை..!

உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் கிராமத்தில், 20க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிராமத்தில் உடனடியாக மருத்துவ முகாமை ஏற்படுத்தி மஞ்சள் காமாலை பாதிப்பை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.