1. Home
  2. தமிழ்நாடு

பெற்றோர்களே உஷார்..! பப்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்..!

1

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஹாஜாகுஷேன் என்பவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு B2C என்ற பெயரில் பேக்கரி திறக்கப்பட்டு நடத்தி வருகிறார். இதனிடையே சின்னப்பம்பட்டி அருகேயுள்ள மடத்தூர் பகுதியைச் சேர்ந்த விஷ்வநாதன், என்பவர் அவரது குழைந்தைகளான யாஷினி, யாஷித், சபரி, ஆகிய மூன்று பேரையும் B2C பேக்கரியில் அமர வைத்து 2வது மகன் யாஷித் பிறந்த நாளுக்காக 3 பேருக்கும் பப்ஸ் வாங்கி கொடுத்து பேக்கரியிலேயே சாப்பிட்டுள்ளனர்.

பப்ஸ் சாப்பிட்டு விட்டு சிறிது தூரம் செல்லும்போதே மூன்று பேருக்கும் வாந்தி, பேதி, மயக்கமடைந்தனர் உடனடியாக இளம்பிள்ளையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் மூன்று பேரையும் அனுமதித்து அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இத்தகவலறிந்த மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன், எடப்பாடி வட்டார உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் குமரகுருபரன்,மற்றும் கொங்கணாபுரம் போலீசார் சம்மந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும், உணவுப்பொருட்களையும் ஆய்வு செய்தும் மீதமுள்ள பப்ஸ்களை பறிமுதல் செய்தும் எச்சரிக்கை விடுத்து B2C பேக்கரிக்கு சீல் வைத்து அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

பேக்கரி

தொடர்ந்து இது போன்ற உணவு சம்மந்தமான கடைகளில் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன் பேட்டியளித்தார். இதனால் கொங்கணாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending News

Latest News

You May Like