‘பாரசைட்’ பட நடிகர் லீ சுன் கியுன் மர்ம மரணம்..!!
பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாரசைட். இப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் லீ சுன் கியுன். 2001-ம் ஆம் ஆண்டு வெளியான லவ்வர்ஸ் எனும் சிட்காம் தொடரில் அறிமுகமான இவர் அதன் பிறகு பல்வேறு குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 2014-ம் ஆண்டு இவர் நடித்த எ ஹார்ட் டே திரைப்படம், உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக இந்த ஆண்டு வெளியான ஸ்லீப் என்ற திகில் படத்தில் அவர் நடித்திருந்தார்.
46 வயதாகும் லீ, இன்று சியோல் நகரில் உள்ள பார்க்கில் தனது காரின் உள்ளே அவர் இந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லீ சுன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, லீ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் போலீஸ் விசாரணைக்கு செல்லும்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் மீது நம்பிக்கை வைத்த ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரை ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். இந்நிலையில், லீ சுன் மரணம் தற்கொலயா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.