அமானுஷ்யம்... ஃபேண்டஸி...அசத்தும் ஜீவாவின் 'அகத்தியா' ட்ரைலர்!
திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா, அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்கிறார். திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலில் இண்டெர்நேஷனல் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் ட்ரைலரிலேயே 120 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆத்மாக்களுடன் பேச போவதாக ஒரு குரல் கூறுகிறது.
அர்ஜுன் ஆவியுடன் பேசி, ஒரு பிரமாண்ட மாளிகைக்குள் என்ன நடந்தது என்பதை ஜீவா தெரிந்து கொள்வதும். அந்த வீட்டுக்குள் இருக்கும் ரகசிய கதவு எப்படி திறக்க சில குறிப்புக்கள் மூலம் ஜீவா கண்டு பிடிப்பது என நொடிக்கு நொடி ஆர்ச்சியத்தை ஏற்படுத்தும் திருப்பங்களுடன் இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
.png)