பேப்பர் ஸ்ட்ரா வாயில் கரைகிறது... அமெரிக்காவில் டிரம்ப் போட்ட விவகாரமான உத்தரவு..

மீண்டும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்பாட்டை கொண்டு வர முடிவு செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
காலநிலை மாற்றம், சுற்றுசூழல் பாதிப்பு மீது டிரம்ப் நம்பிக்கை கொண்டவர் இல்லை. இதன் காரணமாகவே பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. அவரும் அவரின் கட்சியும் காலநிலை மாற்றத்தை தவறான கருத்து, பொய்யான பிரச்சாரம் என்று மறுப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இதற்கு எதிரான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். அந்த வகையில்தான் மீண்டும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்பாட்டை கொண்டு வர முடிவு செய்துள்ளார். அதேபோல் அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவில் இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் வரும் நாட்களில் குறைக்கப்படும்.
ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளார்.
உலகம் முழுக்க மக்கள் இடையே இவி கார், பைக் வாங்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இந்த மோகத்திற்கு பின் மார்க்கெட் மாறியதே காரணம். உலகம் முழுக்க வெப்பமயமாக்கலுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. இதன் காரணமாக உலகின் பல நாடுகள் இவி வாகனங்களை வாங்க ஊக்குவிக்கின்றன.
இந்தியாவிலும் கூட கடந்த மாதம் வரை இவி வாகனங்களை வாங்க வரி விலக்கு, சலுகைகள், நிதி உதவிகள் கூட வழங்கப்பட்டு வந்தன. இது போக காற்று மாசை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐநா பல நாடுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதற்கு இவி வாகனங்கள் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் போக மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் காலியாக தொடங்கி உள்ளது. உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை உச்சம் அடைந்து உள்ளது. ரஷ்யாவின் எண்ணெய்யை உலக நாடுகள் பல வாங்குவது இல்லை. இதெல்லாம் போக இவி வாகனங்கள் செலவு குறைவு. அதுதான் இப்போது டிரெண்டும் கூட. இப்படி பல காரணங்களால் இவி வாகனங்கள் அதிகம் விற்கப்படுகிறது.
ஆனால் தற்போது அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளார். பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.
இந்த உடன்படிக்கையில் பிடன் கையெழுத்திட்ட காரணத்தால் அமெரிக்காவில் பல இடங்களில் சிஎன்ஜி எடுக்க தடை விதிக்கப்பட்டது. அதேபோல் கச்சா எண்ணெய் இறக்குமதி, ஏற்றுமதியும் குறைக்கப்பட்டது. இதற்கு பதிலாக இவி வாகனங்கள் களமிறக்கப்பட்டன.
ஆனால் டிரம்ப் இது இரண்டையும் நிராகரித்து உள்ளார். டிரம்ப் உத்தரவின் பெயரில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. அதோடு கச்சா எண்ணெய், சிஎன்ஜி ஆலைகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதோடு சிஎன்ஜி எடுக்க ஊக்குவிக்கப்படும், ஏற்கனவே மூடப்பட்ட கிணறுகள், ஆலைகளை அரசு மீண்டும் திறக்கும் என்று கூறி உள்ளார்.