முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வழக்கு மார்ச் 25 க்கு ஒத்திவைப்பு..!
2001-2006 -ல் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்குகளில் மூத்த வழக்கறிஞர் இன்றும், நாளையும் ஆஜராகி வாதிட இயலாததால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 25-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.