ஓ.பன்னீர்செல்வம் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு: நயினார் நாகேந்திரன் பேட்டி..!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பத்தை கேட்டறிந்து வருகிறார்.
அவர்கள் விருப்பப்படி பட்டியலை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். அந்த வகையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசியபோது சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் உள்ள ஒரு தொகுதியிலும், சரத்குமார் விருதுநகரிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கூட்டணி விட்டு விலகிய ஓபிஎஸ் பற்றி பேசிய நயினார்,
கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன் பன்னீர்செல்வத்திடம் பலமுறை பேசினேன். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என வலியுறுத்தினேன் என்றார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் எனவும் கூறினார் .