1. Home
  2. தமிழ்நாடு

ஷாக்கான பன்னீர்... அசத்தும் எடப்பாடி! சசிகலாவுக்கு நோ எண்ட்ரி!

ஷாக்கான பன்னீர்... அசத்தும் எடப்பாடி! சசிகலாவுக்கு நோ எண்ட்ரி!


அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடப்பாடிக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் இடையே முதல்வர் வேட்பாளர் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், திடீரென மீண்டும் ஒரு தர்ம யுத்தத்திற்கு (?) தயாரானார் ஓபிஎஸ். ஆனால், கடந்த முறை ஓபிஎஸ், மெளன சாமியாராய் ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து, தர்ம யுத்தம் என்று ஸ்டண்ட் அடித்த போது கூடிய ஆதரவு கரங்கள் இந்த முறை பெரிய அளவில் கூடாமல் மிஸ் ஆனது, ஓபிஎஸ்ஸை ஜெர்க்காக வைத்தது என்கிறார்கள்.

ஷாக்கான பன்னீர்... அசத்தும் எடப்பாடி! சசிகலாவுக்கு நோ எண்ட்ரி!

தனக்கு அந்தளவுக்கு மாஸ் கூடாதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்த, தொடர்ந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த ஓபிஎஸ்.., தான் முதல்வர் வேட்பாளர் என்று போர்க்கொடி உயர்த்துவதை கட்சியில் பெரும்பான்மையானவர்கள் ரசிக்கவில்லை என்கிற நிஜத்தைப் புரிந்துக் கொண்டதாக கூறுகிறார்கள். பொதுகுழு உறுப்பினர்கள் என்று எல்லா பக்கத்திலும் ஓபிஎஸ்ஸை விட எடப்பாடிக்கு தான் கட்சிக்குள் ஆதரவு அதிகமிருப்பது ஓபிஎஸ்ஸை அதிர வைத்திருக்கிறது என்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், வேண்டுமானால் கட்சியை விட்டு ஓபிஎஸ் தனியே கிளம்பட்டும் என்கிற ரீதியில் பேசியிருக்கிறார்கள் உறுப்பினர்கள்.

அதிமுகவை விட்டு வெளியே சென்றால், தன்னை தன்னுடைய நிழல் கூட மதிக்காது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் ஓபிஎஸ். அதனால், தற்போது நிபந்தனைகளை குறைத்துக் கொண்டு தனக்கு பொது செயலாளர் பதவி, மகனுக்கு மந்திரி பதவி என்று டீல் பேசியிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

ஷாக்கான பன்னீர்... அசத்தும் எடப்பாடி! சசிகலாவுக்கு நோ எண்ட்ரி!

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார்கள். அப்படி காஞ்சிபுரம் பகுதியில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் தர்மமே வெல்லும்! தர்மத்தின் நாயகரே நாளை முதல்வரே என்றும் அதிமுக தொண்டர்கள் உங்கள் பக்கம் போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளனர். சுவரொட்டியை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர்.வி ரஞ்சித்குமார் ஓட்டியுள்ளார். நேற்று மாலை ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கோஷங்களையும் எழுப்பினார்கள். விடிய விடிய நேற்று நடந்த பேச்சுவார்த்தையிலும் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லையாம். அதனால், இன்று முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார்கள். எது எப்படியோ, சசிகலாவிடம் அதிமுக சென்று விடக் கூடாது என்பதில் மட்டும் ஓபிஎஸ்ஸும், எடப்பாடியும் ஒற்றுமையாக உள்ளார்கள்.

Trending News

Latest News

You May Like