விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
ஈரமான ரோஜாவே’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை சாய் காயத்ரி. தனது கதாபாத்திரம் எதிர்மறையாகச் சென்றதால் அதிரடியாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து, ‘நீ நான் காதல்’ என்ற சீரியலில் இரண்டு மாதங்கள் நடித்தவர் அங்கிருந்தும் விலகுவதாக அறிவித்து ’சாய் சீக்ரெட்ஸ்’ என்ற பெயரில் தனது அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரிடம் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அடிக்கடி தனது நிறுவனத்திலிருந்து வீடியோ எடுத்துப் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் சாய் காயத்ரி. இந்த நிலையில், தனது பணியிடத்தில் அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அவரது கை இயந்திரத்தில் சிக்கியிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயத்ரி இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.