1. Home
  2. தமிழ்நாடு

இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் : ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!

1

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் கொண்டாடி வருகிறது. 

மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அதிகாரத்தைக் குறைத்துக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. இப்படிப் பகிரப்பட்ட காரணத்தினால் தான் அரசியல் நிர்வாகமானது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.இதன் காரணமாகவே இந்த பஞ்சாயத்து ராஜ் தினம் ஆண்டுதோறும் மார்ச் 24ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் தான் சிறந்த பஞ்சாயத்துத் தலைவருக்கான விருதும் வழங்கப்படுகிறது.

ஒரு நாட்டில் மக்களின் நலன் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்குச் சீரான அரசியல் அதிகாரமும் முக்கியமாகும். இந்த அரசியல் அதிகாரங்களானது பகிர்ந்து அளிக்கப்படும் போதுதான் மக்களுக்கான தேவைகள் அனைத்தும் எளிதாக நிறைவேறும்.

அப்படிப்பட்ட அதிகார பகிர்வு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்டம். இந்த பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை மறைந்த முன்னாள் இந்தியாவின் பிரதமர் ராஜீவ்காந்தி கொண்டு வந்துள்ளார்.

இந்தச் சட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே அதிகாரத்தைப் பரவலாகக் கொடுப்பதுதான். மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிகவும் வலிமையானவை ஆகும்.

இந்நிலையில், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பஞ்சாயத்து ஆட்சி முறையானது நமது பழமையான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் ஆன்மாவாக இருந்து வருகிறது. பஞ்சாயத்துகள், சுயராஜ்ஜியத்தின் வலுவான தூணாக மட்டுமல்லாமல், சுயசார்பு பாரதத்தின் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சி மாதிரியின் பிரதிபலிப்பாகவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like