பஞ்சபூத ஆலயம் வழிபாடு பலன்கள் : 12 ராசியினர் எந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும்?
12 ராசிகளை நம் முன்னோர்கள் நெருப்பு, நிலம், நீர், காற்று என நான்கு வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 3 ராசிகள் என 4 பிரிவில் தலா 3 ராசிகள் உள்ளன.
நெருப்பு, நிலம், நீர், காற்று ராசிகள்
நெருப்பு ராசிகள் :- மேஷம், சிம்மம்,தனுசு
நிலம் ராசிகள் :- ரிஷபம், கன்னி,மகரம்
காற்று ராசிகள் :- மிதுனம், துலாம், கும்பம்
நீர் ராசிகள் :- கடகம் , விருச்சிகம் , மீனம்
நமக்குரிய ராசி, லக்கினத்திற்குரிய கோயிலுக்கு சென்று வர அதற்கான நற்பலனைப் பெற்றிட முடியும்.
உங்களுக்கு லக்கினம் எந்த ராசியைக் குறிக்கின்றதோ அதற்குரிய அந்த லக்கினத்துக்கு உண்டான பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் உங்கள் லக்ன தோசம் நிவர்த்தியாகும்.
பஞ்சபூத ஸ்தலங்கள்;
மண் (நிலம்) -காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில் ( Ekambareswarar Temple )
நீர்-திருவானைக்காவல் - ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் திருவானைக்காவல் (Jambukeshwarar Temple, Thiruvanaikaval)
நெருப்பு- அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை ( Arunachaleswara Temple )
காற்று -ஸ்ரீ காளஹஸ்தி திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் ( SriKalahasti temple )
ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில் (Nataraja Temple, Chidambaram)
எடுத்துக்காட்டாக மிதுனம் காற்று ராசியைச் சேர்ந்தது. நீங்கள் மிதுன லக்கினம் என்றால், காற்று ராசிக்குரிய ஸ்ரீ காளஹஸ்தி ஆலயத்திற்கு உங்கள் பிறந்த நட்சத்திர நாளன்று சென்று வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.