1. Home
  2. தமிழ்நாடு

2 நிமிடத்தில் பான் கார்டுகளில் திருத்தம் செய்யலாம்..!எப்படி தெரியுமா ?

1

வங்கி தொடர்பான பரிவர்த்தனை, வருமான வரித்துறை போன்ற பணிகளுக்கு பான் கார்டு கட்டாயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பான் - ஆதார் இரண்டையும் இணைக்க வேண்டியுள்ள நிலையில், இரண்டு கார்டிலும் உள்ள தகவல்கள் ஒன்றாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பெயர், பிறந்த தேதி, முகவரி ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் பான் கார்டில் எப்படி திருத்தம் செய்யலாம் என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

முதலில் புதிய பான் கார்டு விண்ணப்பிக்க அல்லது திருத்தம் செய்ய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கமான www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html க்கு செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து அப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘Application Type’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் Changes or Correction in Existing PAN card’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதனை தொடர்ந்து பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதன்பின்னர் நமது இமெயில் எண்ணிற்கு டோக்கன் எண் அனுப்பப்படும். அதனை ஷேவ் செய்து வைக்க வேண்டும். இதனையடுத்து விண்ணப்ப பக்கத்தில் முகவரி மற்றும் அடையாள சான்று, டிஜிட்டல் கையெழுத்து உள்ளிட்ட விவரங்களை பதிவேற்ற வேண்டும்.

விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய பிறகு படிவத்தை சமர்பிக்க வேண்டும். இதற்கு ரூ. 110 சேவை கட்டணமாக செலுத்த வேண்டும். இதன்பின்னர் உங்கள் பான் கார்டில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய அட்டை வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 

Trending News

Latest News

You May Like