பல்டி அடிக்கும் பழனிசாமியாக மாறிவிட்டார் பழனிசாமி : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு..!
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தில் தினந்தோறும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வருகிறார். ஒரு நாள் தனித்தே ஆட்சியை பிடிப்போம் என்று கூறுகிறார். பாஜகவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுக்க முடிவே அதிமுக, பாஜக கூட்டணியின் முடிவு என்று பாஜகவினர் கருத்து தெரிவிக்கிறது. இதற்கு அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று பல்டி அடிக்கிறார்.
நாளோறு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புவலர் பெருமானாக பல்டி அடிக்கும் பழனிசாமியாக மாறி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த தேர்தல்களில் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வியை தந்து கொண்டிருக்கிறார். இதனால், எந்த இடத்திலும் திமுக தோல்வியை சந்திக்கவில்லை. இதேபோல, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வியை திமுக அரசு தந்து கொண்டிருக்கிறது.
தமிழ் ஆன்மீகத்தை வளர்த்தது, ஆன்மீகம் தமிழை வளர்த்தது. இதில், எந்த விதமான மாறுபட்ட கருத்து இல்லை. இதில், அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர் போன்றோர் தமிழுக்காக தொண்டு செய்வதற்வர்கள். இதில், மாற்றுக் கருத்து கிடையாது. ஆன்மீகமும், தமிழும் ஒன்று தான். இதில், புதிய சித்தாந்தத்தை கண்டு பிடித்தது போல கூறுவதை ஏற்க முடியாது. எடப்பாடி பழனிசாமி புளிச்ச பயணம் மேற்கொண்டு கொண்டிருக்கிறார்.
மக்களோடு மக்களாக இருக்கும் முதல்வர் தினந்தோறும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற் உடனேயே அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல முடியாது. மக்களுடைய தேவைகளை அறிந்து ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒவ்வொரு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார் முதல்வர். மக்களுடைய தேவைகளை அறிந்தே தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருவிக நகரில் மாநகராட்சி மேயர் பிரியா வார்டு பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 2,500 மனுக்கள் பெறப்பட்டன. அந்த இடத்திலேயே 500-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை நோக்கி செல்லும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். தீர்வில்லை பயணத்தை தொடங்கி கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்தார்.