1. Home
  2. தமிழ்நாடு

இன்று துவங்குகிறது பழனி முத்தமிழ் முருகன் மாநாடு..!

1

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கி வரும் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆகஸ்ட் 24 மற்றும் 25ஆம் தேதி தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் 1300 ஆய்வுக் கட்டுரைகள் ஐந்து ஆய்வகங்கள் 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டவார்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர். மேலும் 4 நீதி அரசர்கள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் இந்த மாநாட்டில் முருகன் புகழை விளக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கும்மியாட்டம் கந்த சஷ்டி கவசம் என இரண்டு நாட்களும் காலை எட்டு மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்காக பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் 8000 பக்தர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநாட்டிற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வந்து செல்வார்கள் என்பதால் மருத்துவ வாகனங்கள் குடிநீர் வசதிகள் டாய்லெட் வசதிகள் மருத்துவ வாகனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டமைப்புகள் என அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாநாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்ட தன்னார்வலர்களும், மாணவ மாணவிகள், கல்லூரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

இருந்தால் நடைபெறும் இந்த மாநாட்டில் 30 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிட வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like