1. Home
  2. தமிழ்நாடு

இந்திய எல்லையில் உளவு பார்வை.. பாகிஸ்தான் ராணுவ ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது !

இந்திய எல்லையில் உளவு பார்வை.. பாகிஸ்தான் ராணுவ ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது !

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் அத்துமீறல் முயற்சிகள் ஒருபுறம் இருக்க பல்வேறு நூதன வழிகளில் ஆயுதங்களும், குண்டுகளும் இந்திய எல்லைக்குள் கொண்டுவரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் எல்லையில் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டு இந்திய ராணுவ வீரர்களால் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஊருடுவ முயற்சி செய்யும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்திய எல்லையில் உளவு பார்வை.. பாகிஸ்தான் ராணுவ ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது !

அதேநேரத்தில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவனத்தினரும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கெரான் பகுதியில் பறந்த பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு ட்ரோனை இந்திய ராணுவம் சனிக்கிழமை சுட்டு வீழ்த்தியது.

இந்திய கட்டுப்பாட்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி வருகிறது. உளவு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய ட்ரோனை இந்திய ராணுவத்தினர் சனிக்கிழமை காலை சுட்டு வீழ்த்தினர்.

இந்திய எல்லையில் உளவு பார்வை.. பாகிஸ்தான் ராணுவ ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது !

சீனத் தொழில்நுட்ப நிறுவனமான டி.ஜே.ஐ தயாரித்த இந்த ட்ரோன், இந்தியக் கட்டுப்பாட்டுப் பகுதியில் 70 மீட்டர் தூரத்தில் பறந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஆயுதங்களைத் தாங்கி வந்த இதேபோன்றதொரு ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like