1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்...!

Q

பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது. இந்தச் சூழலில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது அகமது ஷெரீப் சவுத்ரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வில் பேசிய ஷெரீப் சவுத்ரி, “எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், உங்கள் மூச்சை அடைத்துவிடுவோம்” என்று கூறியுள்ளார்
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் மூளையாக இருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், இதே வார்த்தையை பயன்படுத்தி சமீபத்தில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ஹபீஸ் சயீத் சமூக ஊடகங்களில் பேசிய வீடியோ வைரலானது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏப்ரல் 23 அன்று சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதுகுறித்து, “ரத்தமும் நீரும் ஒன்றாகப் பாய முடியாது; பேச்சும் பயங்கரவாதமும் ஒன்றாகச் செல்ல முடியாது” என்று இந்தியா தெரிவித்தது.

Trending News

Latest News

You May Like