1. Home
  2. தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல் நாளில் ஊதியத்துடன் பொது விடுமுறை..!

1

 இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் நடைபெற உள்ள தேர்தலுக்கு தேவையான அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் மற்றும் போதிய அறிவுறுத்தல்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையை ஜூன் 4 ம் தேதி அன்று காலை 8:00 மணிக்கு தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதே போல் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஆனது அறிவுறுத்தி உள்ளது. பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிக்க ஏதுவாக இருக்கும் வகையில் இந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like