1. Home
  2. தமிழ்நாடு

பத்ம ஸ்ரீ விருது பெற்ற சாமியார் மீது இளம் பெண் பாலியல் புகார்..,!

Q

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் பாரத் சேவாஸ்ரம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் கார்த்திக் மஹாராஜ்.
இவர், நாட்டின், நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை சமீபத்தில் பெற்றார். இந்நிலையில், ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை அவர் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அந்த பெண் முர்ஷிதாபாத் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
ஆசிரம வளாகத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி சாமியார் என்னை ஆசிரமத்தில் தங்க வைத்தார். நான் தங்கியிருந்த அறைக்கு வந்த அவர் என்னை பலாத்காரம் செய்தார்.
இவ்வாறு கடந்த 2013 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதத்தில் 12 முறை பலாத்காரம் செய்தார்.
அவர் பா.ஜ.,வுக்கு நெருக்கமானவர் என்பதால் பயத்தில் நான் புகார் அளிக்கவில்லை.
மேலும் போலீசில் புகார் அளித்தால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார். என்னை பலாத்காரம் செய்த கார்த்திக் மஹாராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like