1. Home
  2. தமிழ்நாடு

தமிழர்கள் எட்டு பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..!

1

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் மொத்தம் 8 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் பரத நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமண்யத்திற்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பரத நாட்டியக் கலையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். கலைத்துறையில் இவரது சேவையை கொளரவிக்கும் வகையில் இவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்-க்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த இவர், மக்களிடம் விழிப்புணர்வு மிக்க கருத்துகளை திரைப்படங்களின் மூலம் விதைத்தார். மக்களால் ‘கேப்டன்’ என்று அழைக்கப்பட்ட இவரது கலைத்துறை சேவையை கெளரவிக்கும் வகையில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒயிற்கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு கும்மி பயிற்சி அளித்ததற்காகவும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் ஸ்குவாஷ் நட்சத்திரமான ஜோஷ்னா சின்னப்பாவுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இவர், தொடர்ந்து விளையாட்டுத்துறையில் இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளார்.

நெய்தல் பகுதி மக்களின் வாழ்க்கையை விவரிக்கும்படியான இலக்கியங்களை படைத்து புகழ்பெற்றவர் ஜோ டி குரூஸ். 2013 ஆம் ஆண்டு ‘கொற்கை’ எனும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவருக்கு, இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவத்துறை சேவைக்காக ஜி.நாச்சியார், கலைத்துறை சேவைக்காக நாதஸ்வர வித்துவான் சேஷம்பட்டி டி சிவலிங்கத்திற்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.குடியரசுத் தின மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது.  

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, பின்னணி பாடகி உஷா உதுப் உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ், மருத்துவர் ஜி.நாச்சியார், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா உள்ளிட்ட 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருதுகள் விவரம்:

பத்மஸ்ரீ விருது

1) பத்ரப்பன் - வள்ளிகும்மியாட்ட நடன ஆசிரியர்.

2) பார்பதி பரூவா: இந்தியாவின் முதல் பெண் யானை பாகன்.

3) ஜெகேஷ்வர் யாதவ்: பழங்குடியின நல சமூக சேவகர்.

4) சாமி முர்மு: சுற்றுச்சூழல், பெண்கள் மேம்பாடு.

5) குர்மீந்தர் சிங்: சமூக சேவை.

6) சத்யநாராயணனா பெலேரி : பாரம்பரிய நெல் விவசாயம்.

7) சங்கதன் ஹிமா : சமூக சேவை.

8) ஹேம்சந்த் மஞ்சி: பாரம்பரிய மருத்துவம்.

9) துஹ்குமஞ்சி: மேற்குவங்க பழங்குடியின மேம்பாடு.

10) கே. செல்லம்மாள்: தெற்கு அந்தமான்: ஆர்கானிக் விவசாயம்.

11) யனுங்க் ஜமோலிகோ: மூலிகை மருத்துவம்.

12) சோமன்னா : பழங்குடியினர் நல சமூக சேவை.

13) சர்பேஷ்வர் பசுமத்ரி : மலைவாழ் விவசாயம்.

14) பிரேமா தன்ராஜ்: சமூக சேவை, பிளாஸ்டிக் மறுசுழற்ச்சி.

15) உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே: சர்வதேச விளையாட்டு மல்லர் ஹம்.

16) யாஸ்தி மேனக்சா இட்டாலியா: மைக்ரோ பயாலாஜிஸ்ட் (நுண்ணறியவியல்).

17) ஷாந்தி தேவி பஸ்வான்: சமூக சேவகி.

18) ரத்தன் கஹர்: நாட்டுப்புற பாடகர்.

19) அசோக்குமார் பிஸ்வாஸ்: பெயிண்டர்.

20) பாலகிருஷ்ணன் சதானம்: புதிய வீட்டில் கல்லுவாளி கதக்ளி கலைஞர்.

21) உமா மகேஷ்வரி: முதல் பெண் ஹரிகதா விரிவுரையாளர்.

22) கோபிநாத் ஸ்வைன்: பாடகர் கிருஷ்ணலீலா.

23) ஸ்மிருதி ரேகா சத்மா: திரிபுரா நெசவாளர்.

24) ஓம்பிரகாஷ் சர்மா: பாரம்பரிய நடன கலைஞர். (மால்வா பிராந்தியம்).

25) நாராயணன்: கண்ணுர்: நாட்புற நடன கலைஞர்.

26) பகபத் பதன் : நிருத்தியா நடன கலைஞர்.

27) சனாதன் ருத்ரபால்: பாரம்பரிய சிற்பி.

28) ஜோடான் லெப்சா: மூங்கில் கைவினைஞர்.

29) மச்சிஹான் சாசா: மண்பாண்ட கலைஞர்.

30) காடம் சம்மையா: சிந்து நாடக கலைஞர்.

31) ஜான்கிலால்: பில்வாரா: பெஹூரூபியா கலைஞர்.

32) தாசரி கொண்டப்பா: வீணை கலைஞர்.

33) பாபுராம்யாதவ்: பித்தளை பொருள் கைவினை கலைஞர்.

34) நோபள் சந்திர சுத்ராதர் : மூன்றாம் தலைவர் முகமூடி தயாரிப்பாளர்

35 )ஜோஷ்னா சின்னப்பாவிற்கு பத்மஸ்ரீ விருது.

36) எழுத்தாளர் ஜோடி குரூஸ்-க்கு பத்மஸ்ரீ விருது,

37) நாச்சியார், சேஷம்பட்டி சிவலிங்கம்- பத்மஸ்ரீ விருது.

பத்மவிபூஷன் விருது

1) வெங்கையா நாயுடு( ஆந்திரா) வுக்கு பத்மவிபூஷன் விருது.

2) பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியத்திற்கு(தமிழ்நாடு) பத்மவிபூஷன் விருது.

3) நடன கலைஞர் வைஜெயந்திமாலாவுக்கு( தமிழ்நாடு) பத்மவிபூஷன் விருது.

4) நடிகர் சிரஞ்சீவிக்கு (ஆந்திரா) பத்மவிபூஷன் விருது.

5) சமூக சேவகி பிண்டேஸ்வர் பதக்( பீகார்) பத்ம விபூஷன் விருது.

பத்மபூஷன் விருது

1) தமிழகத்தின் முன்னாள் கவர்னர் பாத்திமா பீவிக்கு பத்மபூஷன் விருது.

2) கோர்முஸ்ஜி என்.காமா ( மகாராஷ்டிரா)- கல்வி மற்றும் இலக்கியம்.

3) இந்திநடிகர் மிதுன் சக்கரவர்த்தி ( மேற்குவங்கம்) நடிகர்.

4) சீதாராம் ஜிண்டால் (கர்நாடகம் )வர்த்தம் மற்றும் தொழில் துறை.

5) யங் லியூ (தைவான் )வர்த்தம் மற்றும் தொழில் துறை.

6) அஸ்வின் பாலசந்த் மேத்தா ( மகாராஷ்டிரா) மருந்தகம்.

7) ஸ்ரீ சத்யபிரதா முகர்ஜி ( மேற்கு வங்கம்) மக்கள் தொடர்பு.

8) ஸ்ரீ ராம் நாயக் (மகாராஷ்டிரா) மக்கள் தொடர்பு.

9) தேஜாஸ் மதுசூதன் படேல் (குஜராத்) மருந்தகம்.

10) வளஞ்சேரி ராஜகோபால் ( கேரளா) மக்கள் தொடர்பு

11) தத்தாத் ரேயே அம்பதாஸ் ராஜ்தத் ( மகாராஷ்டிரா) கலை.

12) டாக்டான் ரிங்போச் ( லடாக்) ஆன்மிகம்.

13) ஸ்ரீ பியாரிலால் சர்மா ( மகாராஷ்டிரா) கலை.

14) சந்திரேஸ்வர் பிரசாத்தாகூர் (பீகார்) மருந்தகம்.

15) பின்னணி பாடகி உஷா உதுப்பிற்கு பத்மபூஷன் விருது.

16) மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது.

17) குந்தன் வியாஸ் ( மகாராஷ்டிரா) கல்வி மற்றும் இலக்கியம்,இதழியல்.

Trending News

Latest News

You May Like